ஜேவிபி கைவிட்ட லலித் -குகன்!



ஜேவிபியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு தொடர்பில்   கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நிகழ்நிலையில் சாட்சியமளிததுள்ளார்.

மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் காணாமல்போன சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாண நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

எனினும் தனக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும்  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்வதில் சிரமங்கள் உள்ளதாகவும் கோத்தபாய நீதிமன்றிற்கு தெரிவித்து வழக்கிற்கு சமூகமளிக்காது இழுத்தடித்து வந்திருந்தார். அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்ததையடுத்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்திருந்தது.

அதற்கமைய, சுமார் 15வருட இழுபறிகளின் பின்னராக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி, காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு தமது சாட்சியத்தை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments