அமெரிக்காவின் மற்றொரு கடலடி டிரோனை ஈரான் கைப்பற்றியது


ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் நீருக்கடியில் இயங்கும் REMUS 600 என்ற ஆளில்லா நீரடி டிரோனை இடைமறித்துக் கைப்பற்றியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதன் தரவுகளைப் பெறுவதற்காக அந்த கடல் டிரோன் ஈரானிய இராணுவ நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

REMUS 600 என்பது கடலடிப் பகுதிகளை கண்காணித்தல், வரைபடம் தயாரித்தல், கண்ணிவெடிகளை கண்டறிதல் மற்றும் கடலடி ஆய்வுகள் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லாமல் நீருக்கடியில் பயணிக்கும் டிரோன் ஆகும். இது சுமார் 600 மீட்டர் ஆழம் வரை சென்று இயங்கக்கூடியது.

ஆனால், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்க சென்ட்காம், தங்களின் அனைத்து செயல்பாட்டு ட்ரோன்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இச்செய்தியை அது மறுத்துள்ளது.

சமீப நாட்களில் அமெரிக்காவின் நீருக்கடிப் பயணியை கைப்பற்றியதாக ஈரான் கூறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, Dive-LD என அடையாளம் காணப்பட்ட மற்றொரு  நீருக்கடியில் பயணிக்கும் டிரோன் இடைமறித்து  ஈரான் கைப்பற்றிருந்தது.

No comments