திலீபன் உணர்வுகளின்; உயிராக!



திலீபன் நினைவேந்தல் நிகழ்வின் 11-வது நாளான இன்று தமிழர் தாயகமெங்கும் மக்கள் உணர்வு பூர்வமாக மக்கள் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நல்லூர் நினைவிடத்தில் 11ஆம் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் அவ்விடத்திற்கு வருகை தந்த காவற்துறையினர் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபன் 1987 செப்டெம்பர் 15 முதல் செப்டெம்பர் 26 வரை உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தார். 


No comments