திலீபன் சிலை ஜேவிபி அரசாலேயே அகற்றப்பட்டது!
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவுச் சதுக்கத்திலிருந்து, திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ்.மாநகசரசபையும் இலங்கை தமிழரசுக்கட்சியுமே காரணமென அரச அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்டி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான இராசையா பார்த்திபன் சிலை, நீதிமன்ற அனுமதியுடனேயே அகற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ என்பவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதங்களில் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்தைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும், சிலை ஒன்று வைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஒரு சிலை வைக்கப்பட்டது, அது காவல்துறையினரால் அகற்றப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடிகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதை அல்லது காட்சிப்படுத்துவதை நாட்டின் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாட்டில் அவ்வப்போது இனங்களுக்கிடையிலான பதற்றத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment