நல்லூரில் அணையா விளக்கு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுள்ளது.

தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக கடந்த புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறுதிநாள் போராட்டம் மக்கள் எழுச்சி போராட்டமாக இடம்பெறவுள்ளது.

மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. 

போராட்டத்தின் நிறைவினை அடுத்து , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வேலன் சுவாமி உள்ளிட்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.





No comments