அணையா விளக்கு சுடர்கின்றது!



யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை காவற்துறையினர் பெயர்த்து எடுத்துச் சென்றமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அச் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் யாழ்ப்பாணத்தில் தொடர் 'அணையா விளக்கு' போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம், நினைவாலயம் முன்பாக ஏற்றப்பட்ட தீபத்தை அணையவிடாது இரவு பகலாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாண தலைமை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட காவற்துறையினர் இரண்டு வாகனங்களில் வருகை தந்து, நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்துச் சென்றனர்.

காவற்துறையினரின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலையை மீள அதே இடத்தில் வைக்கக் கோரியும் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் குறித்த அணையா விளக்கு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது




No comments