இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்!


இந்தியாவுக்கு புதிதாக பாராளுமன்ற கட்டிடம் இந்திய ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.  பிரதமர் மோடி டிசம்பர் 10 ஆம் தேதி இதற்கான அடிக்கை நாட்டுவார், இதன் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டில்  முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆத்மனிர்பார் பாரதத்திற்கு (Aathmanirbhar Bharat), அதாவது தற்சார்பு இந்தியா என்பதற்கான ஒரு பிரதான எடுத்துக்காட்டாக, நமது நாட்டு மக்களால் கட்டப்படும். இது நமது நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம்" என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  கூறினார்

“புதிய கட்டிடம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் (2022), புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று நம்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

புதிய கட்டிடம் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இருக்கும் என்றும், இதன் கட்டுமான பணியில், 2,000 பேர் நேரடியாகயும், 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபடுவார்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் பிப்ரவரி 12, 1921 அன்று நாட்டப்பட்டது, கட்டுமானத்திற்கு ஆறு ஆண்டுகள் ஆனது. அந்த காலத்தில் அதற்கான செலவு ரூ .83 லட்சம். 1927 ஜனவரி 18 அன்று அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் அவர்களால் இது தொடக்கி வைக்கப்பட்டது

முக்கோண வடிவத்திலான புதிய பாராளுமன்ற கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும்.

புதிய கட்டிடத்தில் இந்தியாவின் (India) ஜனநாயக பாரம்பரியம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு லவுஞ்ச், ஒரு நூலகம், பல குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றைக் காண்பிக்கும் ஒரு பெரிய அரசியலமைப்பு மண்டபம் இருக்கும்.

புதிய கட்டிடத்தில், மக்களவை அறையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவை மேலவை உறுப்பினர்களுக்கு 384 இடங்களும் இருக்கும்.

எதிர்காலத்தில் இரு சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு அதிக இருக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது.

 

 

No comments