வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளரை கைது செய்ய திட்டம்?கூட்டமைப்பின் வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரை கைது செய்ய இலங்கை காவல்துறை மும்முரமாகியுள்ளது.கொழும்பு அரசியல் அழுத்தங்களையடுத்து இக்கைதிற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நம்ப்பப்படுகின்றது.

இதனிடையே என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடப்பதாக அறிய முடிகின்றது. எல்லோருடைய ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஸ் தெரிவித்துள்ளார்.


எமது அனுமதியின்றி மத்திய அரசு எமக்குச் சொந்தமான வீதியை அபிவிருத்தி செய்ய முற்பட்ட நிலையில் பிரதேச சபை உறுப்பினர்களின் முறைப்பாட்டினை அடுத்து எனது பணிப்பிற்கு அமைய எமது சபையினால் அவ் அபிவிருத்தி திட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பிரதேச சபைக்கு வருகைதந்து எனது வாக்கு மூலத்தினை இரண்டு தடவைகளாக பெற்றிருந்தனர்.

அத்துடன் பெயர் பலகையினையும் பொலிஸார் கோரி எடுத்து சென்றிருந்தனர்.

இந்நிலையில் தவிசாளரை இன்று அச்சுவேலி காவல் நிலையத்திற்கு சமூகமளிக்க கோரியிருந்த நிலையில் கைதிற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது. 


No comments