மாநகர ஆணையாளரை தூக்கியடிக்க முயற்சி?

யாழ்.நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள இடருக்கு பொறுப்பேற்று யாழ்.மாநகர ஆணையாளரும் முன்னணி தமிழ் தேசியக்கவிஞருமான ஜெயசீலனை

வெளியேற்ற முயற்சிகள் தொடங்கியுள்ளன.

கூட்டமைப்பு வசமுள்ள யாழ்.மாநகரசபையின் வினைத்திறனற்ற போக்கினால் நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையிலான நிர்வாகம் மீது பலத்த குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக தாம் தப்பித்துக்கொள்ள ஆணையாளரும் முன்னணி தமிழ் தேசியக்கவிஞருமான ஜெயசீலனை வெளியேற்ற முயற்சிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மழை நீர் வடிந்து ஓடாதமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. உள்ளூராட்சி சபைகள் முயற்சிகளை எடுத்தும் பொதுமக்கள் ஒத்துழைக்கமை காரணமாகவும் பொதுமக்களின் சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாகவுமே வெள் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயசீலனை காப்பாற்ற  மாவட்ட செயலர் க.மகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.


கழிவுபொருட்களை வீசுதல் வடிகான்களை மூடுதல் அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாடுகளினால் வெள்ள நீர் ஓடாமல் தேங்குகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினை துப்புரவு செய்ய தவறியமைக்காக ஆணையாளரை தூக்கியடிக்க சதிகள் அரங்கேற தொடங்கியுள்ளது.


பிரபல கவிஞரான ஜெயசீலன் செம்மணி படுகொலை உள்ளிட்டவற்றை மேற்கொண்ட அரச படைகளை அம்பலப்படுத்திய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments