பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த

கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

இவ்வாண்டு பூலோகம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும், மாண்பியலுக்கும் மாறாக எம் மறவர்களை நினைவுகூர இலங்கை அரசு தடைவிதித்து நிற்கின்ற இந்தக் காலப்பகுதியில், நாம் வாழும் நாடுகளில் சுகாதார மற்றும் சட்டவிதிகளுக்கு அமைவாக மாவீரர் நாளை பேரெழுச்சியுடன் நினைவுகூறும் செயற்திட்டத்தை, அனைத்துலக கட்டமைப்பின் வழிகாட்டலை உள்வாங்கி மிகப் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்து எம் அன்புக்குரிய மக்களாகிய உங்களின் பேராதரவுடன் வழமை போன்று பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் 2020 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை செல்வன் கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தாயகநேரம் மாலை 06.07  மணிக்கு மாவீரர்பணிமனை பொறுப்பாளர் திரு அமலதாஸ் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம், மாவீரர்கள் நினைவுதாங்கிய நிகழ்வுகள், தேசியக்கொடி கையேற்றல், இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிறைவுக்கு வந்தது.

No comments