மருண்டவன் கண்:வெள்ள நிவாரணத்திற்கும் தடை?



மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக தோட்ட வேலைக்கு செல்லமுடியாத பெண்தலைமைத்துவ குடும்பங்களும்,வயோதிப குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்க முற்பட்ட சமூக செயற்பாட்டாளர் ச.சஜீவன் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

உதவிகள் தேவை என மக்கள் என்னிடம் கேட்டதற்கு இணங்க இன்று சனிக்கிழமை அவர்களுக்கு வழங்குவதற்காக கடையிலிருந்து அவற்றை வாகனத்தில் எடுத்துச்செல்ல முற்பட்டேன்.இந்நிலையில் குறித்த இடத்துக்கு வந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் என்னையும் வாகனத்தையும் செல்லவிடாது தடுத்து நிறுத்தி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் மாவீரர் தினத்தை தடை செய்வதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை காட்டி இக் கட்டளையை பயன்படுத்தி என்னை கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தினார்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உணவுப்பொருட்கள் வழங்க முடியாது என்று குறித்த நீதிமன்ற கட்டளையில் போடப்படவில்லை என்று வாதிட்டபின் விலகினார்கள். 

இருந்தும் வாகன ஓட்டுனருக்கு ஏற்பட்ட அச்சத்தாலும்,நாங்கள் பொருட்கள் வைத்து வழங்க இருந்த வீட்டுக்குச்சென்று புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாகவும் இன்று பொருட்களை வழங்கமுடியவில்லை.

பயனாளிகள் பலரும் ஏமாற்றத்துடன் சென்றார்கள் மீண்டும் நாளை மறுநாள் உலர் உணர்வுப்பொருட்கள் வழங்கப்படும் என ச.சஜீவன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.



No comments