யாழில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம்?


கொரோனா தொற்று மீண்டும் யாழ்ப்பாணத்தை உலுக்க தொடங்கியிருக்கின்ற நிலையில் 3ம் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யாழ் கல்;வி வலய கோப்பாய் கோட்டப் பாடசாலைகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க மகா வித்தியாலய பணியாளர் ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பழகியமை தெரியவந்துள்ளது.தற்போது இவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவருக்கான கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டால் பாடசாலைகளையே முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் கொரோனா தொற்று உள்ளவருடன் ஒருவர் பழகியுள்ளார். அவர் கடந்த 21ம் திகதி வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் உறவினர்களுடன் தங்கியுள்ளார். இவருடன் பலர் பழகியுள்ளனர். பழகியவர்களில் ஒருவர் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி சாரா ஊழியராக கடமையாற்றும் நபராவார்.இவர் பாடசாலை ஆரம்பமாகி இரு தினங்கள் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.  வவுனியாவில் இருந்து கொற்றாவத்தைப் பகுதிக்கு வந்தவரையும் அவருடன் பழகிய பணியாளரையும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கோப்பாய் கோட்டப் பாடசாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே ஆவரங்கால் பகுதியில் இருந்து பல மாணவர்கள் யாழ் நகர் உட்பட பல முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.


No comments