செயலாளர்களை மாற்றி கொரோனா கட்டுப்பாடு?


கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியர்து இலங்கை அரசு திண்டாடிவரும் நிலையில் அமைச்சு செயலாளர்களை கதிரை மாற்றுவதால் தம்மீதான  குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது.

அவ்வகையில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு செயற்றிட்டதில் இணையவுள்ளார்.

இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவிருக்கும் கொரோனா கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வினைத்திறகான செயற்படவில்லையென தெரிவித்து அவர் பதவியிறக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சிறை காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


No comments