மகிந்தவிற்கு இனி இயலாது?

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பொதுஜனபெரமுனவின் பிடி இழக்கப்பட்டுவருவதாக அவரது கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.இயலாமை காரணமாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து வாசித்துக்கொண்டிருக்கையில் 2.50 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட களைப்பின் காரணமாக 10 நிமிடம் நேரம் கேட்டு நேற்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.


அதனைத்தொடர்ந்து சபாநாயகர் 30 நிமிடங்களுக்கு தேநீர் இடைவேளைக்கு சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். பாராளுமன்றம் மீண்டும் 3.20 மணிக்கு ஆரம்பித்ததும் பிரதமர் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை வாசிக்க ஆரம்பித்தார்.


தேநீர் இடைவேளைக்கு பின்னர் சுமார் அரை மணிநேரம் வரை அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட களைப்பில் சபாநாயகரிடம் சிறிது நேரம் கேட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.


பின்னர் ஆசனத்தில் அமர்ந்தவாறு வாசிக்குமாறு தெரிவித்ததும் வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்து முடிவதற்கு சுமார் 5 நிமிடங்கள் இருக்கும்போது மீண்டும் எழுந்து நின்று வாசித்து 4.50 மணியளவில் முழுமையாக சமர்ப்பித்தார்.


அடுத்த வருடத்துக்கான வரவு செலவுதிட்டத்தை பிரதமர் பிற்பகல் 1.45மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 4.50மணிக்கு முடித்துக்கொண்டார். இதற்கிடையில் அரை மணிநேரம் தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.


அதன் பிரகாரம் சுமார் 2 அரை மணிநேரத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தையும் பிரதமர் சமர்ப்பித்தார்.

இந்நிலையிலேயே அவரது களைப்பு அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments