பிரெண்டிக்ஸ்:விசேட விசாரணை குழுவாம்?
கொரோனா அலையின் இரண்டாம் கட்டத்தை கொண்டு வந்து சேர்ந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட  பிரெண்டிக்ஸ் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணி தொடர்பாக விசாரணை செய்ய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேராவுக்குஅறிவித்துள்ளார்.

குறித்த விசாரணை குழு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதென்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரச தரப்பால் காப்பாற்றப்பட்டுவருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிரெண்டிக்ஸ் நிறுவனம் தொடர்பில் ஊடகங்கள் அம்பலப்படுத்தியதையடுத்தே தற்போது விசாரணை பற்றிய கதைகள்  வெளிவர தொடங்கியுள்ளது.


No comments