உலகின் கடைசியின வெள்ளை ஒட்டகச்சிவிங்கி! பாதுகாப்புக்கு புவியிடங்காட்டி பொருத்தப்பட்டது!


உலகின் வாழும் ஒரே ஒரு வெள்ளையின ஒட்டகச்சிவிங்கியைப் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க புவியிடங்காட்டி (ஜி.பி.எஸ்) சாதனம்

பொருத்தப்பட்டுள்ளது  என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியாக வாழும் ஆண் ஒட்டகச்சிவிங்கியின் நகர்வுகளை உண்மையான நேரத்தில் வனவிலங்கு மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க முடியும் என்று ஒரு பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

ஒட்டகச்சிவிங்கிக்கு லூசிசம் எனப்படும் அரிய மரபணு நிலை உள்ளது. அது தோல் நிறமிழப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த மார்ச் மாதம் அளவில் குறித்த ஒட்டகச்சிவிங்கியின் துணையான பெண்ணையும் 7 மாதக் குட்டியையும் வேட்டைக்காரர்கள் கொன்றுவிட்னர். கென்யாவின் வடகிழக்கு கரிசா கவுண்டியில் உள்ள ஒரு பாதுகாப்பு பகுதியில் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு ஆண் ஒட்டகச்சிவிங்கி தற்போது தனியாக வசித்து வருகிறது. இதுவே வெள்ளையிட ஒட்டகச்சிவிங்கியின் கடைசி இனமாக இருக்கின்றது.

நவம்பர் 8 ஆம் தேதி ஒட்டகச்சிவிங்கி கொம்புகளில் ஒன்றில் கண்காணிப்பு சாதனம் இணைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை மேற்பார்வையிடும் இஷாக்பினி ஹிரோலா சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் முதன்முதலில் மார்ச் 2016 இல் கென்யாவில் காணப்பட்டன.

No comments