யாழில் அறுவரும் இன்று கைதாவர்?

யாழ்ப்பாணத்தில் பதுங்கியுள்ள கொரோனா தொற்றாளிகளுடன் பயணித்தவர்களை ஜீபீஆர்எஸ்

தொழில்நுட்ப மூலம் இன்று மாலையினுள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தென்னிலங்கையில் கொரோனா தொற்றாளிகளை அடையாளப்படுத்த மேற்கொண்ட அதே நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   

முன்னதாக யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பேருந்து சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் அலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் இன்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், சாரதியும் நடத்துனரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பனர். எனினும் அந்த பேருந்தில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments