பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு! 10 மாணவர்கள் பலி!


ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து நடத்தியுள்ள துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.

காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் திங்களன்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் திடீரென்று உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முன்னதாக பல்கலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நுழைவாயிலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பல்கலை வளாகத்தில் துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே மாணவர்கள் சிதறி ஓடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. 

மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதக் குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

No comments