மரமேறிய முதியவர் வீழ்ந்து மரணம்!


மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பிரதேசத்தில் மரமேறிய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையுடனே மரமேறியதால் அவர் தென்னைமரத்திலிருந்து சறுக்கி விழுந்துள்ளார்.

6 பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய கோபால் என்று அழைக்கப்படும் சீனத்தம்பி நடராஜா என்பரே உயிரிழந்தவராவார்.

தென்னைமரத்தில் தேங்காய் பறித்துவிட்டு இறங்கும்போது கை சறுக்கி தலைகீழாக விழுந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சடலம் செங்கலடி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments