புலிகளின் ஆயுதங்கள் சிக்கவில்லை! கைவிடப்பட்டது அகழ்வுப் பணி


மட்டக்களப்பு மண்டூர் 37 ஆம் கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில்  விடுதலைப் புலிகளால் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை எதுவும் அகப்படாத சூழலில் இன்று கைவிடப்பட்டது.

போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் இப்பகுதியைப் பயன்படுத்தியிருந்தாகவும் நிலத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

நேற்று மலை வரை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போதும் எதுவும் கிடைக்காததால் இன்று தேடுதல் நடடிவக்கை கைவிடப்பட்டது.

தேடுதல் நடவடிக்கையி் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், காவல்துறையினர் ஈடுபட்டனர்.

No comments