முதலாவது ஜேம்ஸ் போண்ட நடிகர் காலமானார்!!


ஜேம்ஸ் போண்ட் முதலாவது படத்தில் நடித்திருந்த சீன் கோனரி தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவால் சில காலங்களாக இருந்துள்ளார். அவர் பஹாமாசில் இருந்த போது தூக்கத்தில் இரவு இறந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேம்ஸ் போண்ட் நடித்தத நடிகர்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இப்பாத்திரத்தை முதன் முதலில் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் மற்றும் ஏழு புலனாய்வுத் த்ரில்லர்களில் தோன்றினார்.

அவரது நடிப்பு வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது. அவரது பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். ஒரு ஆஸ்கார் விருது, இரண்டு பாஃப்டா விருதுகள் மற்றும் மூன்று கோல்டன் குளோப்ஸ் ஆகியவை அடங்கும்.

சீனின் மற்றப் படங்களில் தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் லாஸ்ட் க்ரூஸேட் மற்றும் தி ராக் ஆகியவை அடங்கும்.

No comments