வடக்கில் மும்முரம்: சவேந்திரசில்வாவும் வருகை!


கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையினை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன் மாலை 4.30 மணியளவில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுகின்ற யாழ் நகரை சேர்ந்த மேலும் 11 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களது பரிசோதனை முடிவு இன்றிரவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை -03 , யாழ்ப்பாணம் -01 , உடுவில் -02 ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்குமாகவே மொத்தம் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள அனைவரும் கொழும்பில் இருந்து வந்தவர்களாகவும் பேலியகொட பிரதேசத்துடன் தொடர்பு உடையவர்களாகவும் காணப்படுவதோடு சில தாட்களின் முன்பே தனிமைப்படுத்தலிற்கு உட்பட்டவர்களாகவும் கானப்படுகின்றனர்.


No comments