யார் கூட காசு தருகின்றரோ போவோம் வன்னி சட்டத்தரணிகள்!


நாங்கள் யார் கூட பணம் தருகின்றனரோ அங்கு செல்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் வன்னியின் முன்னணி சட்டத்தரணிகள் சிலர்.

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகளில் சிலர் தீர்மானித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தது.

தாங்கள் பணத்திற்காக சோரம் போனவர்களென சமூகம் நகையாட அனுமதிக்கப்போவதில்லையெனவும் அவர்களில் சிலர் தெரிவித்திருந்தனர்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நோர்வே பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலுமிருவரை காவல்துறை தேடிவருகின்றது.

இந்நிலையில் நேற்று அவ்வாறு சொன்னன முன்னணி சட்டத்தரணிகளான அன்ரன் புலிநாயகம், கணகங்காதரன் உள்ளிட்ட பலரிடமும் பிணையில் வெளியே வர குறித்த தாக்குதலாளிகள் பல இலட்சம் பணத்தை செலவிட்டு பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இச்செய்திகள் வெளியான துணுக்கு துண்டுகளுடன் அதே கும்பலிற்காக பணம் பெற்று நீதிமன்றிற்கு வந்து சேர்ந்தவர்கள் நீதிபதிக்கு கோள் சொல்ல தொடங்கினர்.

தாம் நீதிமன்றிற்கு வந்த போதும்  வெளியே செல்கின்ற போதும் ஊடகவியலாளர்கள் படம் பிடிப்பதாகவும் சொக்க தங்கமான தமது சந்தேக நபர்கள் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லையெனவும் விளக்கமளித்துள்ளனர்.

எனினும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏறபட்டுள்ள அதிருப்தி மற்றும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்கம் தோப்புக்களை அழிப்பதில் இலங்கை வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பின்னணி தொடர்பில் இளம் சட்டத்தரணிகள் குழு ஊடகவியலாளர்கள்

மீது அக்கறை கொண்டு ஆஜராகியிருந்தது.

நீராவியடி விகாரை சர்ச்சையின் போது தம்மை படம் பிடிக்க இதே

ஊடகவியலாளர்களிடம் முன்னணி  சட்டத்தரணிகள் கும்பல் முண்டியடித்து நின்றிருந்தது.

அதே போல அரசியல் கைதிகள் விடுதலைக்காக வாதாடுவதாக புலம்பெயர் மக்களது பணத்தை ஆட்டையை போட்ட கும்பல் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

அதிலும் அரசியல்கைதிகள் சாகும் வரை அனுராதபுரம் சிறையில்

உண்ணாவிரதமிருந்த போது கொழும்பில் அவர்களது குடும்பங்களிடமிருந்து பறித்த பணத்தில் கொண்டாடிய சட்டத்தரணிகள் பற்றியும் தகவல்கள் அம்பலமானமை தெரிந்ததே.

No comments