பதுக்கி வைக்கப்பட்டிருந்த தற்கொலை தாக்குதலாளி கார் ?


உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸவி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்தவருடம் ஏப்ரல் 25 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு,மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பெயரில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல ,சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில்;கார் தரிப்பிடம் ஒன்றில் கார்மூடும் தரப்பாலால் மூடி மறைத்து கடந்த ஒருவருடத்துக்கு மேலாக வைத்திருந்த நிலையில் காரை மீட்டுள்ளனர்.

இந்த காரில் காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற விசாரணையில்,குறித்த விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் மீட்கப்பட்ட காரை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்


No comments