இலங்கை இந்தியாவாகலாம்!இலங்கைக்கு அண்மித்த நாடான இந்தியாவில் கொரோனா தாண்டவம் பேரழிவை ஏற்படுத்தும் போது இலங்கையில் அவ்வாறானதொரு அச்சுறுத்தல் இல்லையென்று கூற முடியாது. மாறாக இந்தியாவை போன்றதொரு பாரிய அச்சுறுத்தலுக்கான சாத்திய கூறுகளே அதிகமாகவுள்ளதால் பொது மக்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் ஊடகமொன்றிற்கு வழங்கி நேர்காணலின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடல்வழியாக கொரோனா தொற்று ஏற்படலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் அதனை தாண்டி தென்னிலங்கையில் விமான வழி கொரோனா பரம்பல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments