வெள்ளைமாளிகை நிகழ்வே கொவிட்-19 பரவலுக்குக் காரணம்

கடந்த மாதம் வெள்ளைமாளிகையில் நடந்த உச்சநீதிமன்ற நீதிபதி நியமன நிகழ்வின் போது அதிகளவில் கொவிட்-19 பரவல் ஏற்பட்டது என அமெரிக்கச் சுகாதார நிபுணர் டாக்டர் அந்தோணி ஃபௌச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வெள்ளைமாளிகை அதிகாரிகளுடன் மற்ற சிலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது அடையாளம் காணப்பட்டது.

சுவாசக் கவசம் அணியாதது மற்றும் பாதுகாப்பு இடைவெளியைக்  கடைப்பிடிக்காததே கொவிட்-19 பரவலுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் பொது இடங்களில் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்ட போதும் வெள்ளை மாளிகைக்கு விதிவிலக்காக நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments