விரும்பினால் வீட்டிலிருந்த வேலை செய்யலாம்!!

கனணி மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து மைக்ரோசொப்ட் நிறுவனம ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் சனவரி மாதம் மைக்ரோசொப்ட் நிறுவன அலுவலம் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஊழியர்கள் விரும்பினால் வீட்டிலிருந்த பணியாற்ற அனுமதியளிக்க திட்டமிட்டுள்ளது.

அனைவரும் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதன் பலம் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய மைக்ரோசொப்ட் நிறுவனம் அலுவலத்தை நிரந்தரமாக மூடும் எண்ணம் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments