காற்றினால் கொரோனா வைரஸ் பரவுகிறது அமெரிக்க நிறுவனம் தகவல்!


கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நோய் தடுப்பு மைய நிறுவனம் வெளியிட்டுள்ள பகீர் தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது  

கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொதுநல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் பற்றி அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஏற்கனவே இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டு பின் அதனை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சிடிசி வெளியிட்டுள்ள புதிய தகவலில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றிய நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற காரணங்களால், கொரோனா வைரஸ் தொற்று காற்றிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது என சிடிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


 

No comments