வெடுக்குநாறி:தொடரும் அச்சுறுத்தல்?


இன்றைய தினம் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களை வனவள திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் தமிழ் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை முடக்க வனப்பகுதி ஊடாக பக்தர்கள் மற்றும் மதகுருக்களை செல்ல இலங்கை காவல்துறை தடை விதித்திருந்தது.

முன்னதாக நீதிமன்றம் ஆலயத்தில் பூசை மேற்கொள்ள முடியும் என் கட்டளை பிறப்பித்த நிலையிலும் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த இலங்கை காவல்துறையினர்; ஆலயத்திற்கு சென்றால்; கைது செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

முன்னதாக ஆலயத்திற்கு செல்லவோ பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என தொல்லியல் திணைக்களத்தினர் மிரட்டி வந்திருந்தனர்.இதன் தொடர்ச்சியாக  இலங்கை காவல்துறை வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்; செய்த நிலையில் வழிபாட்டிற்கான அனுமதியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே கடந்த வாரம் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணி காவல்துறையினர் ஆலயத்திற்கு சென்றால் கைது செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிற்கே நீதிமன்றம் அனுமதித்தது. இருப்பினும் வனப்பகுதி ஊடாக செல்லமுடியாது எனத்தடுக்குமாறு மேலித்து உத்தரவு பிறப்பிக்கபக்பட்டுள்ள நிலையில் புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பக்தர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


No comments