முன்னணி ஆதரவாளர்களிற்கு மிரட்டலாம்?

 


வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில் முன்னணி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.அத்துடன்  பெண்ணொருவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் புகுந்து பளைப் பொலீசார் அடாவடியில் ஈடுபட்டதாக கட்சி செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதன்கேணி ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் மருதன்கேணி வைத்தியசாலையை கொறோனோ சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னணியுடன் இணைந்து போராட்டம் நடாத்தப் போகிறாயாவென வினவியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உன்னைக் கைதுசெய்வோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும் கட்சி செயற்பாட்டாளர் இரத்தினசிங்கம் முரளி வீட்டிற்குச் சென்ற பளைப் பொலீசார். அங்கு அவர் இல்லாத நிலையில் அவரையும் கைதுசெய்வோம் என தொலைபேசியூடாக மிரட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments