பார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்?


மாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது.

நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளுராட்சி அணி உறுப்பினர்களுக்கு நல்லூரிலுள்ள விடுதி ஒன்றில் விருந்தளித்துள்ளார் சுமந்திரன்.

தனது அணியை சேர்ந்த தெல்லியூர் ஹரிகரனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததை அடுத்து நேற்று முன் தினம் மாவை அணியின் வலது கரமாகிய ஒழுக்காற்றுக்குழு தலைவர் சிவஞானத்திற்கு அழுத்தம் கொடுத்து பதவி விலக வைத்திருந்தார் சுமந்திரன்.

இதனை தொடர்ந்து நேற்றிரவு நல்லூர் தனியார் விடுதி ஒன்றில் தனது அணி உள்ளுராட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.2018 உள்ளூராட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி தவிசாளர் தெரிவில் தன்னிச்சையாக ஈடுபட்டு பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட பிராகாஸ் இன்; 38வது பிறந்த நாள் பார்ட்டி எனும் பெயரில் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். 


No comments