முன்னணி மணிவண்ணன் மாநகர முதல்வர்?

அரசியலில் எதுவும் நடக்கலாமென்ற கதை தற்போது யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தி போகின்றது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் பல

தலைவர்களிற்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ்.மாநகர முதல்வராக வி.மணிவண்ணன் கதிரையேறலாமென்ற செய்தி வெளிவந்துள்ளது.

மணிவண்ணன் வெற்றி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்போதைய முதல்வர் ஆனோல்ட் எம்.ஏ.சுமந்திரனுடன் முரண்பட்டுள்ள நிலையில் 

முதல்வருக்கு இவ்வருட கடைசியில் கதிரைக்கு வேட்டு வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வரவு செலவு திட்டத்தில் தப்பித்து போயிருந்த ஆனோல்ட்  இம்முறை வெல்வது கடினமென சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் வி.மணிவண்ணன் பக்கமுள்ள நிலையில் கூட்டமைப்பும் வி.மணிவண்ணனிற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் வி.மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர முதல்வராகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனிடையே எடுத்ததற்கெல்லாம் தனது போலி முகநூல் படை அணி மூலம் சேறடிக்கும் போனஸ் எம்.பி கஜேந்திரன் இன்னமும் சுமந்திரனுடான இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் தான் வழக்கு வாபஸ் பெறப்பட்டது என பிரச்சாரத்தை ஆரம்பிக்காமை தொடர்பில் ஊடக வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.


No comments