ஈருறுளி திருத்தகத்திற்கு தீ வைப்பு!


வவுனியாவில் இனம் தெரியாத நபர்களால் ஈருறுளி திருத்தகம் தீயிடப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலையில் உள்ள உப வீதியில் இடம்பெற்றுள்ளது.

தீ பற்றி எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரியாளருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறித்த விபத்தினால் வியாபார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்துள்ளமை நாசமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.No comments