யாழில் அங்காடி வியாபாரம் வேண்டாம்?


ஊரடங்கை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, தங்கால, மாத்தறை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனிடையே யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.


மக்கள் வெளியே போவது மிக ஆபத்தான விடயம். வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக தமது பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தமது வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


No comments