கொரோனாவாவது கூந்தலாவது?:யாழ்.செயலகம்!யாழ்ப்பாணத்தில் திருமண வீட்டில் இவ்வளவு பேரே பங்கெடுக்கலாம்,ஆலயத்திற்கு எவரும் போகக்கூடாதென அறிவித்த யாழ்.மாவட்ட செயலர் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பிரியாவிடை வைபவத்தை யாழ்.நகரில் உள்ள தனியார் நட்;சத்திர விடுதியில் நடத்தியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலர்,மேலதிக மாவட்ட செயலர் மற்றும் செயலக அதிகாரிகள் போதிய தடுப்பு முன்னேற்பாடுகள் ஏதுமின்றி பங்கெடுத்த காட்சிகள் வைரலாகியுள்ளது.

அதே போன்று அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கட்டட திறப்பென மும்முரமாக திரிகி;ன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.


No comments