சுதந்திரத்தை நிராகரித்த நியூ கலிடோனியா மக்கள்


பிரெஞ்சு வெளிநாட்டு பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பில் பிரான்சிலிருந்து பிரிந்து செல்வதை நிராகரித்துள்ளனர்.

இந்த தீவுக்கூட்டத்தில் உள்ள மக்கள் 53.26% வாக்குகளை அளித்து பிரெஞ்சு நாட்டுடன் சேர்ந்து வாழ வாக்களித்துள்ளனர்.

 சுதந்திரத்திற்கான வாக்குப்பதிவு வீதம் 85.6% அதிகமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற வாக்கெடுப்பில் 56.7% வாக்குகளித்து பிரெஞ்சுடன் இருக்க வேண்டும் என்றனர்.

நியூ கலிடோனியா கிட்டத்தட்ட 170 ஆண்டுகளாக ஒரு பிரெஞ்சு பிரதேசமாக உள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த முடிவை "குடியரசின் மீதான நம்பிக்கையின் அடையாளம்" என்று வரவேற்றார்.

No comments