மேலும் முடக்க நிலை?



அடுத்த வாரம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த தரம் ஐந்து மாணவர்களுக்கான புலைமைப் பரீசில் பரீட்சைகள் தொடர்பாக முக்கியமான தீர்மானமொன்று, இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்றுள்ள, களனி பல்கலைக்கழகம், யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் நயிவல உயர் கல்வி நிறுனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மேற்படி கல்வி நிறுவனங்களை, இன்று (05) முதல் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.


ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள  பெண்ணின் மகளுக்கு, கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அவருடன் ஒன்றாகக் கல்வி கற்ற, 31 மாணவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த சிறுமி, திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், இச்சிறுமி தினமும் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.


No comments