இன்று பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாகிறதா நியூ கலிடோனியா?


பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வாக்கெடுப்பில் 56.4 சதவீத மக்கள் பிரான்ஸுடன் இருப்பதையே விரும்பினர்.

இன்றைய வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க வேண்டுமா என்பதை  வாக்கெடுப்பு தீர்மானிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

நியூ கலிடோனியா என்பது தென் பசிபிக் பகுதியில் ஆஸ்திரிரேலியாவுக்கு கிழக்கே உள்ள டஜன் கணக்கான தீவுகளைக் கொண்ட 24,000 சதுர கிலோ மீற்றரைக் கொண்ட ஒரு பிரெஞ்சு பிரதேசமாகும்.

1853 ஆண்டு இந்த நிலப்பரப்பை பிரான்ஸ் இணைத்துக்கொண்டது. இத்தீவில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கே 284,060 பேர் வாழ்ந்து வருகின்றனர்.


No comments