பொம்பியோ ஆட்டம் ஆரம்பம்!!

சீனாவின் மிரட்டல்களின் மத்தியில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸும் கலந்து கொண்டார்.

ஜனநாயக சுதந்திரங்களுக்கான தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாடு தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிப்படையான வர்த்தகம், முதலீட்டின் அடிப்படையிலான பொருளாதார பங்காண்மை மற்றும் தொற்றுப்பரவலின் பின்னரான பொருளாதார மீட்சியின் முக்கிய அங்கங்கள் என்பன குறித்தும் அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

No comments