சீ.வீ.கே பதவி விலகினார்?நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக தமிழ் கட்சிகளது மோதல் உச்சம் பெற்றுவருகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் முகநூலில் பதிவு போட்ட குற்றச்சாட்;டினில் முன்னாள் மாவை ஆதரவாளரும் தற்போதைய எம்.ஏ.சுமந்திரன் அணி முக்கியஸ்தருமான வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரான ஹரிகரன் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்று குழு தலைமை பதவியில் இருந்து சீ.வீ.pகே.சிவஞானம் ராஜினாமா செய்துள்ளார்.

ஏம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரே ஆட்களை நீக்கமுடியுமென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவை அணியின் முக்கியஸ்தரென அடையாளப்படுத்தப்பட்டுள்ள சீ.வீ.கே.சிவஞானம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.


No comments