போதை வியாபாரத்தில் இலங்கை படைகளும்?


இலங்கை பொலிஸார் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஆட்களை கைது செய்வது தொடருகின்ற நிலையில் இராணுவத்திலுள்ள சிலர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வடக்கில் போதை பொருள் கடத்தலில் கடற்படை முதல் அதிரடிப்படை,இராணுவமென போதைபொருள் வர்த்தகத்தில் தூள் பறத்துவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன

ஆயினும் ஆட்சியாளர்கள் அதனை கண்டு கொள்ளாத நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச தண்டனை நிச்சயம் வழங்கப்படுமென இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிங்கள பாதாள உலக கும்பலிற்கும்  படைகளிற்குமிடையே உள்ள உறவின் மத்தியில் கோத்தாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதியினையடுத்து அவர்களிற்கெதிராக வேட்டை தொடர்கிறது.


No comments