மட்டக்களப்பில் கைக்குண்டுடன் கைது?


மட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (11) மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களை கைது செய்யச்சென்றபோது, பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட வாள் வெட்டு குழுவின் தலைவரான தணு என்பவருக்கு எதிராக 2018ம் ஆண்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒன்பது குற்றங்கள் தொடர்பிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments