திரிசூலத்தை உடைத்தது தொல்லியல் திணைக்களமா?



முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அப் பகுதி மக்களால் திரிசூலம் உடைக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (10) குமுழமுனைப் பகுதிக்கு நேரில் பயணித்துள்ளார்.அவருடன் செயற்பாட்டாளர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும், குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

திட்டமிட்ட வகையில் திரிசூலம் உடைக்கப்பட்டதற்கு துரைராசா ரவிகரன் தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொல்லியல் திணைக்களம் அப்பகுதியில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் நீதிமன்ற படியேறி தடுத்துள்ளனர்.

ஆயினும் அங்கு விகாரை அமைப்பு பணிகளல்ல காவலரண் அமைப்பு பணிகளே நடைபெறுவதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments