யாழ்.போதனா வைத்தியசாலை கழிவே?யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்; மருத்துவக் கழிவுகளே செம்மணியில்  நிலத்தில் வெட்டித் தாழ்க்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்திற்குள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் டிப்பர் வண்டிகளில் ஏற்றி வந்து புதைக்கும் வேளையில் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையில் பயன் படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , ஊசிக் கழிவுகள் என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் 3 தினங்களிற்கு முன்னர் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு புதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு குழியில் கொண்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளவ மூடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலி ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் உறுப்பினர்கள் அவர்களை மடக்கிய சமயம் வைத்தியசாலையில் பணியாற்றும் எமக்கு இது பற்றி தெரியாதென மறுதலித்துள்ளனர்.

சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயாணத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த விடயத்தை கண்டித்து நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மயானத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில. விதிமுறையை மீறிய வகையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய்க் கழிவுகளும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இரகசியமாக எரியூட்டப்பட்டமை , பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் அதிகளவான மருந்துகள் குடியிருப்பின் மத்தியில் இரகசியமாக தீ இட்டு எரித்தமை போன்ற சம்பவங்கள் வெளிவந்திருந்த நிலையில் இச்சம்பவமும் வெளிவந்துள்ளது.


No comments