இதுவும் கடந்து போகும்: ஆசீர்வாதம் வழங்கிய ஆதீனம்?இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்களால் முடங்கியிருந்த நல்லூர் ஆதீனத்தை தற்போது அதே படை தளபதிகள் ஆசீர்வாதம் பெற காத்திருக்கின்ற பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

2014ம் ஆண்டிற்கு முன்னதாக ஆதீனத்தை சந்திக்கின்ற தூதர்கள்,சர்வதேச ஊடகவியலாளர்கள் தொடர்பில் படைபுலனாய்வு பிரிவு கண்ணில் எண்ணெய் விட்டு தேடுவது வழமை.சில வேளைகளில் ஆதினமும் பலாலியின் அச்சுறுத்ததலை எதிர்கொண்டிருந்தார்.

ஆனாலும் கடந்த காலத்தை மறந்து வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அதனை இந்த அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என நல்லை ஆதீனம்; யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.


குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments