நடுவீதியில் கைவிட்ட சங்கரி?



தன்னோடு சேர்ந்திருப்பவர்களை நடுவீதியில் கைவிட்டு செல்வது ஆனந்தசங்கரியி; அரசியல் பாதையாகும்.

அவரது உசுப்பேற்றலில் உயிர் பலியான திருமதி.யோகேஸ்வரன் தொடங்கி யாழ்.மாநகர முதல்வர் சிவபாலன் என பட்டியல் நீளமானது.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,கூட்டமைப்பினை தொடர்ந்து தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியினல் மீ;ண்டும் உள்ளக மோதல்கள் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் 1998 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த முன்னாள் மாநகர முதல்வர் சிவபாலனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தனது யாழ்.அலுவலகத்தில் நடத்தவிடாது வீதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் சங்கரி.

இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள முக்கியஸ்தரான தங்கமுகுந்தன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 91 வாக்குகளை மட்டும் பெற்ற கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இனியும் இந்த கட்சியில் இருப்பதற்குத் தகுதியற்றவர். அவர் உடனடியாக இந்த கட்சியை விட்டு வெளியேறி அவருக்கு அடுத்ததாக உள்ள இளைஞர்களிடம் கட்சியை கொடுப்பதன் மூலமே கட்சி தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியும்.

ஆனந்தசங்கரி அவர்கள் தன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து செயற்படுகிறார். எமது கட்சி உறுப்பினரின் நினைவேந்தல் நிகழ்வினை கட்சி அலுவலகத்தில் நடாத்துவதற்குக் கூட அனுமதி வழங்காது கட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டார். உடனடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுவினை கூட்டி கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஆனந்தசங்கரி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments