முன்னணி -ஜேவிபி புரிந்துணர்வு?


சபாநாயகரின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு சார்பானவையாக காணப்படுகின்றதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நிலையியற்கட்டளை சட்டத்தின் கீழ் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம தனது அறிக்கையை வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தமை குறித்தே ஜே.வி.பியின் தலைவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கட்சி தலைவருக்கு விசேட அறிக்கையை வெளியிடுவதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் உரிமையுள்ளது.

எனினும் சபாநாயகர் எடுத்த முடிவு குறித்து நான் கவலையடைகின்றேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் இந்த விடயத்தை ஏனைய கட்சி தலைவர்களுடன் ஆராய்ந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாளைய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments