படம் காண்பிக்கும் கோத்தா?


தென்னிலங்கையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்க முற்படும் போது அதனை திசைதிருப்ப நாடகங்களை அரங்கேற்றுவது கோத்தபாய பாணியாகும்.

வீதி போக்குவரத்து சர்ச்சைகள் மற்றும் தோட்டதொழிலாளர் பிரச்சினைகளை திசைதிருப்பவே கோத்தாபாய அரச அலுவலக பயண செய்தியை அவிழ்த்துவிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தின் சொத்துக்கள் பிரிவு முகாமையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட முகாமையாளர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹேன்பிட்டியிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு சேவையை பெற்றுக்கொள்ள வந்திருந்தவர்கள் ஜனாதிபதியிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் வருகையை அடுத்து குறித்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அந்த அதிகார சபையின் கணக்கீட்டு பிரிவின் விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

No comments