கிளிநொச்சியில் சேதம்?


கிளிநொச்சியில் அதிகாலை வீசிய கடும் காற்றுடன் மழையில் கடையும் வீடும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இன்று (29)அதிகாலை இடம்பெற்ற பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவு சேதமாகியுள்ளது.


அண்மைக்காலமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது இன்று அதிகாலை பலத்த காற்று வீசப்பட்ட காரணத்தினால் மரம் சரிந்து விழுந்துள்ளது இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகிலிருந்த விட்டு திட்டத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரையின் மேல் மரம் விழுந்ததனால் அவ் வீடு பகுதி அளவு சேதமாக்கப்பட்டுள்ளது.No comments