மோடி:மகிந்த பேச்சு:கோத்தாவை நம்ப மறுக்கும் தெற்கு!

 எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டரில் தமிழில் பதிவிட்டுவிட்டு ஒய்ந்துவிட தெற்கு இரண்டாகியுள்ளது.

தான் மகிந்தவுடன் அபிவிருத்தி, பொருளாதார உறவு, சுற்றுலாத்துறை, கல்வி, கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய  சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தில் கைவைக்க மேற்கொள்ளப்பட்ட கோத்தாவின் முயற்சிக்கு இந்தியா குட்டுபோட்டதாக தென்னிலங்கை ஊடக பரப்புக்கள் பரபரப்பாகியுள்ளன.

இதனை சுட்டிக்காட்டும் கேலிச்சித்திரங்கள் தூள் பறத்த இலங்கை அரசோ 13பற்றி மோடி பேசவேயில்லையென சத்தியம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


No comments